பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பான நால்வர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2022.08.10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்கவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து, பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களால் களவாடப்பட்ட பல பொருட்களும் தருமபுரம் பொலிஸாரால் 13ம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கரவண்டிகள் இரண்டும், தொலைக்காட்சி பெட்டி ஒன்றும், மடிக்கணனி ஒன்றும், தங்கச்சங்கிலி ஒன்றும், தோடு இரண்டும், கைத் தொலை பேசிகள் நான்கும் பொலிசாரல் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி - வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவகள் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 வரும் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பான நால்வர் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY