
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பரமன்கிராய் பகுதியில் விபத்து - யாழ்.இளைஞர் பரிதாப மரணம்
கிளிநொச்சி - பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்று (11) ஞாயிறு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மன்னார், நாவற்குழி செல்லும் ஏ-32 பிரதான வீதியில் பரமன்கிராய் பகுதியில் இன்று (11) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் விபத்திற்கான காரணம் தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)