
posted 15th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பண்ணாகத்தில் அமிர்தலிங்கம் நினைவு தினம் அனுஷ்டிப்பு
முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (14) நடைபெற்றது. பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பண்ணாகம் அண்ணா கலைமன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின்உ ருவச் சிலையின் முன்றலில் இந் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு உருவச் சிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.
நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன், திருமதி யசோதா சரவணபவன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான ஜெயந்தன் , பண்ணாகம் அண்ணா கலை மன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பங்கேற்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)