
posted 11th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
பண்டாரவன்னியன் சதுக்கம் கவனிப்பாரற்ற நிலையில்
வவுனியா நகரத்தின் மத்தியில் மாவட்ட செயலகத்தின் முற்பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அப்பகுதி சரியான பராமரிப்பின்றி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.
கடந்த காலங்களில் பண்டாரவன்னியனின் பெயரில் சில அமைப்புகள் காணப்பட்டன. ஆனால், அந்த அமைப்புக்களும் தற்போது செயலிழந்து போய் இருப்பதும் கவலைக்குரிய விடயமாகும்.
வன்னியின் அடையாளமாக காணப்படும் பண்டாரவன்னியனின் சிலைக்கு இப்படியொரு நிலையா எனவும் மாவட்ட செயலகத்தினராவது இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
ஞாபகார்த்த நாட்களில் மாத்திரம் இதனை சுத்தம் செய்வதை விடுத்து, தொடர்ந்தும் இந்தப் பகுதியை பராமரிப்பதற்கு உரிய அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், சிவில் அமைப்புகள் முன்வரவேண்டும்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)