படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 31.05.2024 (வெள்ளி) அன்று மாலை 4.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெறவுள்ளது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் எற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் வட கிழக்கு ஊடக அமைப்புக்கள் என பலரும் பற்கேற்கவுள்ளனர்.

இதன்போது மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நிகழ்வு அனுஸ்ட்டிக்கப்படவுள்ளதோடு, பின்னர் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டிய போராட்டமும் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பொது அமைப்புகளையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)