
posted 15th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நெல்லை உலர வைப்பதில் சிரமத்திற்குள்ளான விவசாயிகள்
அம்பாறையில் பெய்யும் திடீர் மழையால் சிறுபோகத்தில் அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
தாம் அறுவடை செய்த நெல் மழையால் ஈரமுற்ற நிலையில் அவற்றை கல்முனை - அக்கரைப்பற்று, கல்முனை - அம்பாறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் வெயிலில் உலர்த்தி வருகின்றனர்.
பெரும் போகத்தின் போது ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு சிறுபோகத்தில் சிறந்த விளைச்சல் கிடைந்திருந்த போதிலும், இதுவரை நெல் சந்தைப்படுத்தும் சபையால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படாததால் அரிசி ஆலைகளுக்கே வழங்கி வருகின்றனர். இதனால் பாரிய நஷ்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்றனர். ஈரமான நெல்லை மிகக்குறைந்த விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் கொள்வனவு செய்வதால் உலர வைக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நெல்லை உலர வைப்பதற்காகவும் மேலதிக பணத்தை செலவிட வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)