நுளம்பு பெருகவைத்தால் சட்டத் தண்டிப்பு கடுமையாக இருக்கும். எச்சரிக்கும் ஆளுநர்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நுளம்பு பெருகவைத்தால் சட்டத் தண்டிப்பு கடுமையாக இருக்கும். எச்சரிக்கும் ஆளுநர்

நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும், யாழ். பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 775 டெங்கு நோயாளர்கள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் முழுவதும் யாழ். மாவட்டத்தில் 3,986 டெங்கு நோயாளர்களே பதிவாகினர். ஆறு மரணங்களும் பதிவாகின. இதில் ஐந்து கடந்த டிசம்பர் மாதத்திலே பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களால் இயன்ற அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன என்று அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், பொதுமக்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதில்லை எனவும் அதிகாரிகள் கூறினார். இந்நிலையில், சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காத 1,542 இடங்கள் கடந்த 12ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 147 இடங்கள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களை விட படித்த சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களிலே சூழல் பாதுகாப்பு மிக மோசமாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமையை, சூழலை சுத்தமாக பேணாது நுளம்பு பரவும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்த செயல்பாடுகளுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும் ஒவ்வொரு தெருவிலும் பொதுவான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து, அதனை உரியவாறு பராமரிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார்.

இவ்வாறான செயல்பாடுகளில் பொதுமக்களை உள்வாங்கி உள்ளுராட்சி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை பொதுமக்களும் சமூகப் பொறுப்புகளை உணர்த்து செயல்படுவது இன்றியமையாதது என்றார் வடக்கு மாகாண ஆளுநர்.

நுளம்பு பெருகவைத்தால் சட்டத் தண்டிப்பு கடுமையாக இருக்கும். எச்சரிக்கும் ஆளுநர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More