
posted 12th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நிந்தவூர் ஆதார வைத்தியசாலை மகப்பேற்று விடுதிக்கு வழங்கப்பட்ட ECG Machine
நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் அவ்வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதிக்கு ECG Machine ஒன்றினை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடிய பணிப்பாளர் வைத்தியசாலையின் தேவைகளையும், குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டதுடன், அதில் அத்தியாவசிய தேவையாகவுள்ள சில விடயங்களை உடன் நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.ஐ.எம். பௌஸ் பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம். மாஹிர், உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் என்.எம். இப்ஹாம், கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)