நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்

துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்

நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான் என நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு கூறினார்.

Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும், அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.

இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2000க்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

தற்போது நாங்கள் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும். அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும். ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம். இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம். நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம்.

நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டம் மூலம் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்கள்தான்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Mahanadhi - மகாநதி - 12 - 13.03.2026

Read More
Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Varisu - வாரிசு - 11 - 14.02.2026

Read More
Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Mahanadhi - மகாநதி - 09 - 11.03.2026

Read More