நாளை நோன்புப் பெருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
நாளை நோன்புப் பெருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இலங்கை வாழ் முஸ்லிம் மகக்ள் புனித நோன்புப் பெருநாளை 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொண்டாடவுள்ளனர்.

இலங்கை பிறைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக முஸ்லிம் மக்கள் 30 தினங்கள் நோன்பு நோற்றலைப் பூர்த்தி செய்து இந்த பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

1443 ஆம் இஸ்லாமிய வருடத்திற்கான ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கடந்த ஞாயிறு மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின் இடம்பெற்றது.

பிறைக்குழுத்தலைவர் அல்-ஹாஜ் ஹிஸாம் பலாஹி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அன்றைய தினம் நாட்டின் எப்பாகத்திலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததால்,

ரமழான் நோன்பை முப்பதாகப் பூர்த்தி செய்து, 3 ஆம் திகதி செவ்வாய் கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள உயரதிகாரி மற்றும் மேமன் சங்க பிறைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்படி இம்முறை எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி வழமை போல் பெருநாள் கொண்டாட்டங்கள் இடம்பெறவிருப்பதுடன்,
திறந்த வெளிகள் மற்றும் திடல்களில் நோன்புப் பெருநாள் தொழுகைகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை நோன்புப் பெருநாள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now


ENJOY YOUR HOLIDAY