
posted 18th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாட்டுக்காக நாம் அர்ப்பணித்து செயலாற்ற முன்வரவேண்டும் - பிள்ளையான்
நாட்டுக்காக நாங்கள் அர்ப்பணித்து செயலாற்ற முன்வர வேண்டும். இல்லையென்றால் முன்னெடுக்கும் கடையடைப்பும், போராட்டங்களும் எதிர்கால குழந்தைகளையே பாதிக்கும் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
சந்திரகாந்தனின் 2024 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், மட்டக்களப்பு, கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் திறப்பு விழா மற்றும் பெயர்ப் பலகையை திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நாங்கள் அனைவரும் திட்டமிட்டு சரியாக செயலாற்றினால் அடுத்த ஐந்து வருடங்களில் அனைவருக்கும் உயர்ச்சியும், சம்பள அதிகரிப்புகளும் முக்கியமாக இளைஞர் - யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
அனுபவம் இல்லாதவர்களின் கதைகளை கேட்டு அரசாங்கத்தின் கொள்கையை சரியாக மதித்து நடக்கத் தவறினால் நாடு மீண்டும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளும். அறிவுபூர்வமான வகையில் ஆசிரிய சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் தீர்மானங்களை எடுத்து அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)