
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நல்லூரானுக்கு இன்று கொடி
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 26ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4.45 மணிக்கு கார்த்திகை திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவமும் நடைபெறவுள்ளன.
தொடர்ந்து 23ஆம் திருவிழாவான எதிர்வரும் 31ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.45 மணிக்கு சப்பைரதத் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தேர்த் திருவிழாவும் அடுத்தநாள் செப்ரெம்பர் 2ஆம் திகதியான திங்கட்கிழமை காலை 6. 15 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)