
posted 27th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நண்பியைச் சந்திக்க வந்த இளைஞருக்கு நடந்த கதி
தனது பெண் நண்பியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்த இளைஞரை குழு ஒன்று கடத்திச் சென்று தலைமுடியை வெட்டியதுடன், அவரின் உடலில் வாளால் வெட்டியும் கீறியும் சித்திரவதை செய்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளானார்.
தனது பெண் நண்பியை பார்ப்பதற்காக உரும்பிராய்க்கு வந்திருந்த இளைஞரை வீதியில் மறித்த குழு அவரை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றது. அவரின் தலைமுடியை வெட்டியதுடன், அவரின் உடலில் வாளால் வெட்டியும் கீறியும் சித்திரவதைக்கு உள்ளாக்கியது. இதன்பின்னர், அந்த இளைஞரை உடுவில் பகுதியில் வீதியில் தள்ளிவிட்டு சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு வந்த மானிப்பாய் பொலிஸார் இளைஞரை அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அத்துடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)