
posted 19th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நண்பிக்கு பணம் கொடுத்து ஏமாந்தவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்
தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாகப் பெற்று கொடுத்த பணத்தை மீளப் பெறமுடியாமையினால் மனமுடைந்த குடும்பப் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.
உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்தபோது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகைப் பணத்தைக் கடனாக பெற்று, தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார்.
பண உதவியை பெற்றுக்கொண்ட பெண், பணத்தை மீளச் செலுத்தாத நிலையில், வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்குள்ளாகி மனவுளைச்சலில் காணப்பட்டார்.
இந்நிலையில் அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)