
posted 5th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தொழில் வழிகாட்டல் ஆலோசனை கருத்தரங்கு
பாடசாலையில் இருந்து இடைவிலக்கிய மாணவர்களை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தொழில்பயிற்சி நிலையம் ஆகியவற்றுக்கு அனுமதிப்பதற்காக கிராம மட்டத்தில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தி மாணவர்களை இணைத்து கொள்வது சம்மந்தமான கருத்தரங்கு சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம். அஸ்லம் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கிணங்க திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.எஸ்.ஐ.ஏ மெளலானா மற்றும் மனதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம் நிப்ராஸ் ஆகியோர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம வளவாளராக சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எஸ். தியாகராஜா கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரியின் செயற்பாடுகள், நன்மைகள் சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.
மேலும், இந் நிகழ்வில் நிந்தவூர் தொழிற்பயிற்சி நிலையத்தின் திட்ட உதவியாளர் எம்.எம். மஹ்ஜூன், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். கமல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)