தொழிற்பயிற்சி நிலைய பயிலுனர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தொழிற்பயிற்சி நிலைய பயிலுனர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

அம்பாறை மாவட்ட செயலகத்தின் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தின் பயிலுனர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட விழிப்புணர்வு கருத்தரங்கு தொழிற் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட தொழிற்ப யிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ். அப்துல் நாஸர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான.! இஷட்.எம். ஸாஜீத் மற்றும் என்.எம். நூஸ்கி ஆகியோர் கலந்து கொண்டு வியாபார நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தினர்.

இதன்போது பாவனையாளர் உரிமைகள், பொறுப்புகள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள், தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை, நுகர்வோர் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் மற்றும் முறைப்பாடு செய்வது சம்மந்தமாக தெளிவுபடுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் தொழிற் பயிற்சி நிலையத்தின் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

தொழிற்பயிற்சி நிலைய பயிலுனர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)