
posted 22nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தொல்லியல் அகழ்வாய்வு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள்
பிரித்தானியா சமூக முன்னேற்ற மையத்தின் நெறிப்படுத்தலில், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் எற்பாட்டில் ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வினை நிறைவு செய்த 42 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு 20.07.2024 அன்று யாழ். பண்பாட்டு மையத்தில், யாழ். மரபுரிமை மையத்தின் தலைவரும் ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் பொறுப்பதிகாரியும், வாழ்நாள் போராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மரபுரிமை மையத்தின் உபதலைவர் போராசிரியர் சுப்பிரமணியம் ரவிராஜ் கலந்து கொண்டு ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவினை செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இதில் தொல்லியல் திணைக்கள முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஏச்.நிமல்பெரேரா, பிரித்தானியா சமூக முன்னேற்ற மையத்தின் அதிகாரிகள், ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)