
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 4 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
முக்கிய திருவிழாக்களான 5 ஆம் திருவிழாவான காலைத் திருவிழா 8 ஆம் திகதி வியாழக்கிழமை காலை8 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு சதுர்த்தி விநாயகப் பெருமானுடன் முருகப் பெருமானும் எழுந்தருள்வார்கள். 10ஆம் திருவிழாவான பூங்காவன உற்சவம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை பகல் 9 மணிக்கு இடம்பெறும். 11 ஆம் திருவிழாவான கைலாச வாகன உற்சவம் 14 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். 14ம் திருவிழாவான சப்பறத் திருவிழா 17ம் திகதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கும், 15ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கும், 16ம் திருவிழாவான தீர்த்தத்திருவிழா 19ம் திகதி திங்கட் கிழமை காலை 8 மணிக்கும் நடைபெறும்.
தீர்த்தத்திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு மௌனத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும்மறுநாள் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 6.30 மணியளவில் தொண்டர் பூசை நடைபெறும். மகோற்சவ தினங்களில் சந்நிதி சுற்றாடலில் அமைந்துள்ள அன்னதான மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)