தேரோட்டப் பெருவிழா! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஈழமணித் திருநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று (25) மாலை தேரோட்டம் இடம் பெற்றது.

இதன்போது மேள வாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் ஒலிக்க, பெண் மற்றும் ஆண் அடியவர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க, முருகப் பெருமான் ஆலய வளாகத்தினைச் சுற்றி வலம் வந்தார்.

இத்தேரோட்டப் பெருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாலயம் இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை நோக்கியவாறு அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

இன்றைய தினம் (26) வங்கக் கடலில் இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவுபெற்றது.

இதேவேளை இவ்வாலய மஹோற்சவம் கடந்த 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கத

தேரோட்டப் பெருவிழா! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY