
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தேசிய மட்டத்துக்கு தெரிவான வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு
தேசிய மட்டத்துக்குத் தெரிவான கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மெய்வல்லுநர் வீரர்கள் மற்றும் பட்மிண்டன் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான நிர்வாக குழுவினர், பாடசாலை நிர்வாகத்தினர், வர்த்தகர்கள், விளையாட்டுக் கழகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களை கெளரவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)