
posted 29th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தெய்வ சுரூபங்களின் மேல் காட்டும் வெறித்தாண்டவம்
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்ததிருந்தார்.
இந்நிலையில் இதனை அறிந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர் நேற்று (28) இரவு காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே நிறுவப்பட்டிருந்த மாதா சொரூபத்தை அடித்து நொருக்கியுள்ளார்.
குறித்த நபர் குறித்த மாதா சொருபத்தை மூன்றாவது தடவையாக அடித்து நொருக்கியுள்ளார் என்று பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)