
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
துப்பாக்கிச்சூட்டில் புடுகாயமடைந்த விவசாயி
அறுவடை செய்த நெல்லை வீதியில் காயவைத்துவிட்டு, காவலுக்கு படுத்திருந்தவர் மீது புதன்கிழமை (24) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், அவர் படுகாயமடைந்தார்.
முல்லைத்தீவு - துணுக்காய் - கல்விளான் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூட்டில் கல்விளான்குளம் கமக்கார அமைப்பின் செயலாளரான செல்லையா கிருஷ்ணராஜா (வயது 42) எனபவரே படுகாயமடைந்தவராவார்.
படுகாயமடைந்த அவர் மல்லாவி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கல்விளான் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)