தீ அனைக்கும் இயந்திரம் கிடைக்கப்பெற்றது. ஜே! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்த வேண்டுகோளில் ஒன்று தற்பொழுது மன்னார் பிரதேச சபையினால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி கடைகள், வீடுகள் திடீரென தீப்பற்றி எரியும்போது இவற்றை உடன் அணைத்து உடமைகளை காப்பாற்ற முடியாத நிலையில் இப்பகுதியில் தீ அனைக்கும் இயந்திரம் இல்லாத காரணத்தினால் பலர் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகி வந்துள்ளனர்.

இது தொடர்பாக பலர் அரசுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் குரல் கொடுத்து வந்தபோதும் தற்பொழுது இக் குறைபாட்டை மன்னார் பிரதேச சபையினால் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் தீயணைக்கும் இயந்திரம் இல்லாத குறையை தீர்த்து வைக்கும் நோக்குடன் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியால் மன்னார் பிரதேச சபைக்கு இத் தீயணைக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டள்ளது.

வெள்ளிக்கிழமை (18.03.2022) கொழும்பில் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சில் இவ் இயந்திரம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீனிடம் கையளிக்கப்பட்டு மன்னார் பிரதேச சபைக்கு கொண்டு வரப்பட்டள்ளது.

தீ அனைக்கும் இயந்திரம் கிடைக்கப்பெற்றது. ஜே! | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House