
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருமலையில் இறந்து கரையொதுங்கும் நண்டுகள்
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் நேற்றுச் சனிக்கிழமை (10) அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கின.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தப் பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகின்ற நிலையில் இலட்சக்கணக்கான நண்டுகள் இறந்து நிலையில் கரையொதுங்கியுள்ளமை மக்கள் மத்தியில் ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீற்றர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)