
posted 15th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருமணத்துக்கு முன்னைய ஆலோசனை பயிற்சி
கிளிநொச்சி உள நல சங்கம் " இலங்கையில் பால் நிலை சமத்துவத்தை மேம்படுத்தல் " எனும் திட்டத்தை IMHO Canada இன் நிதி பங்களிப்புடன் கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இச் செயற்பாட்டில் திருமணத்துக்கு முந்தைய உளஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை புதிதாக திருமணமான தம்பதியினருக்கு மேற்கொண்டுவருகின்றனர்.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேற்பார்வை குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட உளவளத்துணையாளர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 9,10,11 ம் திகதிகளில் கண்டி வீதி அரியாலையில் அமைந்துள்ள J விருந்தினர் விடுதியில் நடைபெற்றிருந்தது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி