
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
திருகோணமலை காந்திபுர மக்களுக்கு காணி உரிமை
திருகோணமலை, காந்திபுரத்தில 157 குடும்பங்கள் கடந்த ஏழு தசாப்தங்களாக (70 வருடங்கள்) காணி உரிமைகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு காணி உரிமையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த மக்கள் கடந்த 70 வருடங்களாக எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
காணி உரிமைகளற்ற இந்த 157 குடும்பங்களும் நம்பிக்கையிழந்து தற்காலிக இருப்பிடங்களில் வாழ்ந்து வருகின்றன.
இது தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, முன்னுரிமை நடவடிக்கையாக நிரந்தரத் தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்து தற்போது காணி உரிமையையும் பெற்றுக் கொடுத்துள்ளதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.
காணி உரிமை பெற்றுக்கொடுக்கும் இந்த நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மதிவாணன், முன்னாள் பிரதேச செயலாளர் தனேஸ்வரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)