தாபரிப்பு வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்றி கணவனிடம் பணம் பெற்றவர் சிக்கிக் கொண்டார்.

நீதிமன்றத்தை ஏமாற்றி மூன்று பிள்ளைகளின் தாயார் நீண்ட காலமாக கணவனிடம் தாபரிப்பு பணம் பெற்று வந்ததை நீதிமன்றில் கணவனின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கணவனிடம் பெறப்பட்ட தாபரிப்பு பணத்தை மீளச் செலுத்துவதற்கான நிலை மனைவிக்கு ஏற்பட்ட நிலை மன்னார் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளிக்கிழமை (12.08.2022) மன்னார் நீதவான் நீதிமன்றில் நீண்டகால தாபாரிப்பு வழக்கு ஒன்று மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இவ் வழக்கானது மன்னார் நகர சபை எல்லைக்குள் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய்க்கும் இவரின் கணவருக்குமிடையே குடும்ப பிரிவினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டளவில் தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் தாபரிப்பு பணம் அல்லது பராமரிப்பு பணம் கோரி கணவனுக்கு எதிராக மனைவி தாபரிப்பு வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த பெண் இவ்வழக்கினை தாக்கல் செய்த பொழுது இப் பெண் வேறு ஒரு ஆணுடன் சோர வாழ்க்கை வாழ்ந்து வந்ததுடன் அச் சோர வாழ்க்கை காரணமாக ஒரு ஆண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்று வரை இப் பெண் கணவனிடமிருந்து தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் தாபரிப்பு பணத்தை நீதிமன்றத்தின் ஊடாக பெற்று வந்துள்ளார்.

ஆனால் இப் பெண் வேறொரு ஆணுடன் சோர வாழ்க்கை வாழ்ந்து இதன் மூலம் ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்ததை நீதிமன்றுக்கு மறைத்த நிலையிலேயே இத் தாபரிப்பு பணத்தை பெற்று வந்தள்ளார்.

அத்துடன் தாபரிப்பு பணத்தை பெற்று வந்த பிள்ளைகள் 2018ம் ஆண்டு காலப் பகுதியிலேயே 18 வயதினை பூர்த்தி செய்தவர்களாகவும் இம் மூன்று பிள்ளைகள் திருமணமும் முடித்துவிட்டார்கள் எனவும் மன்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

ஆனால் தாபரிப்புச் சட்டத்தின் இறுக்கத் தன்மையினை குறித்த பெண் தனக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் செலுத்தப்படாவிட்டால் சிறை தண்டனை கிடைக்குமென குறித்த கணவரை அச்சுறுத்தி மாதாந்தம் தாபரிப்பு பணத்தினை பெற்று வந்துள்ளார்

ஆனால் கடந்த தவணையின் போது கணவனுக்காக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி எஸ். டினேஷ் குறித்த பெண் தாபரிப்பு பணத்தினை பெற உரித்துடையவர் அல்ல எனக்கூறி வழக்கினை விசாரணைக்கு எடுக்குமாறு மன்றில் விண்ணப்பம் செய்திருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டபோது பெண்ணிடம் சட்டத்தரணி டினேஷ் குறுக்கு விசாரனை செய்தபோது;

நீங்கள் கடந்த 20 வருடங்களாக இன்னொரு ஆணுடன் வாழ்ந்து வருகின்றீர்கள் என கேட்டபொழுது அது பொய் எனவும் தான் 19 வருடங்களாகவே வாழ்ந்து வருகின்றோம் என அப் பெண் தெரிவித்ததுடன் தனக்கு செலுத்த வேண்டிய நிலுவைப்பணம் 79 ஆயிரம் ரூபா பணத்தினை பெற்று தருமாறு மன்றில் கோரியிருந்தார்.

விசாரணையின் பின்னர் குறித்த வழக்கானது வெள்ளிக்கிழமை (12.08.2022) இவ் வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி திருமதி நிரஞ்சினி முரளிதரன் முன்னிலையில் கட்டளைக்காக நியமிக்கப்பட்டிருந்தது.

வழங்கப்பட்ட கட்டளையில் குறித்த பெண்ணே இன்னொரு ஆணுடன் வாழ்ந்து வருவதை ஏற்று கொண்டதாகவும் சோர வாழ்க்கை வாழும் பெண் தாபரிப்பு பணத்திற்கு உரித்துடையவர் அல்ல என்றும், பிள்ளைகள் 18 வயது நிரம்பியவர்கள் என்ற அடிப்படையில் பிள்ளைகளுக்கு பிரதிவாதி தாபரிப்பு பணம் செலுத்த வேண்டிய தேவையில்லையென்றும், குறித்த பெண் நீதிமன்றை தவறாக வழிநடாத்தியே தாபரிப்பு பணத்தினை பெற்று வந்துள்ளார் என்பது தெளிவாகின்றது எனக் கூறிய நீதவான் அவர்கள் பிரதிவாதி செலுத்த வேண்டிய 79 ஆயிரம் ரூபா நிலுவை பணத்தினை செலுத்த தேவையில்லையென்றும், விண்ணப்பதாரி (பெண்) மேலதிகமாக பெற்ற 65 ஆயிரம் ரூபா பணத்தினை குறித்த கணவருக்கு மீளவும் செலுத்துமாறும் கட்டளை பிறப்பித்தார்.

நீதவான் அவர்கள் 65 ஆயிரம் ரூபா பணத்தினை வேண்டி தருவதா என வினவ குறித்த கணவர் அந்த பணம் தனக்கு வேண்டாம் என கூற குறித்த வழக்கானது இன்று முடிவுறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாபரிப்பு வழக்கில் நீதிமன்றத்தை ஏமாற்றி கணவனிடம் பணம் பெற்றவர் சிக்கிக் கொண்டார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More