தாந்தாமலையில் கூடும் பல்லாயிரம் பக்தர்கள்

தாந்தாமலையில் கூடும் பல்லாயிரம் பக்தர்கள்

கிழக்கில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தாந்தாமலை சிறீ முருகன் ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (21) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெறவிருப்பதாக ஆலய பரிபாலன சபை செயலாளர் எஸ். பரா தெரிவித்தார்.

அம்பாறையில் மூன்று மலைக்கோவில்கள் உள்ளன. தாந்தாமலை, சங்குமண் கண்டிமலை, உகந்தைமலை என்பனவாகும். இவை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயங்களாகும்.

கடந்த சில தினங்களாக தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கு ஆயிரக்கணக்கான அடியார்கள் வந்து வழிபட்டனர்.

மலையில் ஏறி விநாயகரையும் மலையடிவாரத்தில் ஆறுமுகனையும் வழிபட்டு வருகின்றனர். நேற்று (19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலய பூஜையில் மிகவும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பலர் நேர்த்திக் கடன் செலுத்தினர். இங்கு நீண்ட கடைத்தெரு காணப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து சேவையும் சீராக நடைபெறுகிறது.

நாளை (21) தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதால் மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடுகளில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

தாந்தாமலையில் கூடும் பல்லாயிரம் பக்தர்கள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi மகாநதி 26.08.2025

Mahanadhi மகாநதி 26.08.2025

Read More
Varisu - வாரிசு - 26.08.2025

Varisu - வாரிசு - 26.08.2025

Read More
Mahanadhi மகாநதி 25.08.2025

Mahanadhi மகாநதி 25.08.2025

Read More