தமிழ் மக்களே ஒன்றுபடுவோமா?

சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தற்போது ஒன்றுபட வேண்டிய காலம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் நினைவு ஆலயத்துக்கு முன்னால் இனப்படுகொலைகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தலை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் பயணத்தில் உயிர்நீத்த ஆன்மாக்கள் மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகவில்லை என்பது இன்று தென்னிலங்கையில் நடைபெறுகின்ற சம்பவங்களின் மூலம் நம்பிக்கை கொள்ளக் கூடியதாகவுள்ளது.

எங்கள் மீது இனப்படுகொலை செய்து அந்த ராஜபக்‌ஷ சொந்த மக்களாலேயே துரோகி என்றும் கள்ளன் என்றும் கொலைகாரன் என்றும் தூற்றப்பட்டு பதவியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் கண்முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷவும் விரைவிலேயே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதே எமது விருப்பம்.

அவர் வீட்டுக்குச் செல்வது மட்டுமல்ல, அவர் மேற்கொண்ட இனப்படுகொலைகளுக்காக சர்வதேச சட்டங்களின் முன் நிறுத்தப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அந்த வகையில் தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம். சிங்கள பௌத்த பேரினவாதம் பலவீனமடைந்திருக்கின்றது. தங்களுக்குள் மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் இந்த ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிடியில் இருந்து வெளிவந்து, ஒற்றையாட்சியை நிராகரித்து, ஒரு தீர்வுக்காக ஒன்றுபட்டு, இந்தியாவின் கூலிகளாக இருக்கின்ற தமிழ்த் தலைமைகள் இந்தியாவுக்காக 13ஆவது திருத்தச்சட்டத்தை முன்னெடுக்காது கைவிட்டு ஒதுங்க வேண்டும்.

தமிழ் மக்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கரத்தைப் பலப்படுத்தி சர்வதேச நீதியினைப் பெற்றுக் கொள்வதற்கும், தமிழ் மக்களின் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கும் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என்றார்.

தமிழ் மக்களே ஒன்றுபடுவோமா?

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More