
posted 22nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் பண்பாட்டு உடைகளுடன் வந்து கௌரவத்தை ஏற்ற ஜேர்மன் ஆய்வாளர்
ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட ஜேர்மனிய நாட்டு பெண் ஆய்வாளர் மதிப்பளிக்கப்பட்டார். இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அவரும் அவரின் பிள்ளைகளும் தமிழ் பண்பாட்டு ஆடைகளுடன் வருகை தந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
யாழ்ப்பாணத்தில் அகழ்வாய்வு பணிகளில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த கலாநிதி அரியானா ஈடுபட்டு வருகின்றார். கந்தரோடையில் 2023ஆம் ஆண்டு அகழ்வாய்வுகளை மேற்கொண்டு அவற்றின் ஆய்வுகளை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போதும் கந்தரோடை அகழ்வாய்வு பணிகளுக்காக ஜேர்மன் நாட்டில் இருந்து வருகை தந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக ஆனைக்கோட்டையில் இடம்பெற்ற தொல்லியல் அகழ்வாய்வு பணிகளிலும் அவர் பங்கேற்றிருந்தார்.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆறு மண் படை மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கான முழு ஏற்பாட்டையும் அவரே செய்து வருகின்றார். மண் படைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவற்றின் காலத்தை காணிப்பு செய்வதற்காக அதனை அவர் ஜேர்மன் நாட்டுக்கு எடுத்து செல்லவுள்ளார்.
ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் (20) சனிக்கிழமை நடைபெற்றிருந்தது.
இதன் போது, தனது பிள்ளைகளுடன் தமிழர் கலாசார உடைகளுடன் பங்கேற்ற அவருக்கு அவரின் பிள்ளைகளால் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)