
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழருக்காக குரல்கொடுத்த விக்கிரமபாகு காலமானார்
தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தவரும், நவ சமசமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இன்று (25) வியாழக்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 81.
விக்கிரமபாகு கருணாரத்ன, இடதுசாரி அரசியலுக்காக பல்வேறு தியாகங்களை செய்து மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன் கொள்கைக்காக நின்று போராடிய ஒரு விதிவிலக்கான தலைவராவார்.
1943 மார்ச் 8ஆம் திகதி பதுளை - லுணுகலையில் பிறந்த விக்கிரமபாகு கருணாரத்ன, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கற்று இலங்கை பல்கலைக்கழகதுக்கு தெரிவாகி பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.
1962இல் லங்கா சமசமாஜ கட்சியில் இணைந்த அவர் 1972இல் அந்தக் கட்சியின் மத்திய குழுவுக்கு தெரிவானார். பின்னர் முரண்பாட்டால் கட்சியிலிருந்து விலகிய அவர், 1977இல் வாசுதேவ நாணயக்காரவுடன் இணைந்து நவ சமசமாஜ கட்சியை ஆரம்பித்தார்.
2010இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)