
posted 26th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தங்கத்துரை, குட்டிமணியின் படுகொலைகள் பற்றி பாராளுமன்றத்தில் - செல்வம் அடைக்கலநாதன்
வெலிக்கடை சிறைப் படுகொலையின்போது கொல்லப்பட்ட எமது தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நேற்று (25) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரெலோ இயக்கத்தின் தலைவரும் எம். பியுமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரே தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) உருவாவதற்கு மூலகாரணமாக இருந்தனர். 1983 ஜூலை கலவரத்தின் ஓர் அம்சமாக வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிங்கள கைதிகளால் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்டனர். குட்டிமணி உயிருடன் இருக்கும்போதே அவரின் கண்களை தோண்டி சிங்கள கைதிகள் எறிந்து குரூரம் புரிந்தனர் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)