
posted 13th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
த. தே. பொதுக்கட்டமைப்புக்கு சஜித் பிரேமதாஸவும் அழைப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரை சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரை தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களை தம்மை சந்தித்துப் பேசுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள வேலைப்பளுவுக்கு மத்தியில் இந்த சந்திப்பில் பங்குகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
முன்னதாக, ஜனாதிபதியும் பிரதான வேட்பாளர்களில் ஒருவருமான ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்புக்கு அழைத்திருந்தார். இந்த சந்திப்பிலும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)