
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பிரதிநிதியை நியமித்த ஐரோப்பிய ஒன்றியம்
செப். 21ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்றே ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சான்செஸ் அமோர் ஸ்பெயினை சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு மொசம்பிக்கில் நடந்த பொதுத் தேர்தலையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இவரே கண்காணித்திருந்தார்.
கடந்த காலங்களில் நடந்த நாட்டின் 6 தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)