
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் முடிவு நாளை
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள அரியநேத்திரன் தொடர்பில் தமிழ் அரசுக் கட்சி நாளை (10) ஞாயிற்றுக்கிழமை முடிவு எடுக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவான தமிழ் மக்கள் பொதுக்கட்டமைப்பு ஆகியன இணைந்து எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்துகின்றன.
இதன்படி, தமிழ்ப் பொது வேட்பாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பா. அரியநேத்திரன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டார். அரியநேத்திரன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராகவும் மத்திய குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமைக்கு அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)