
posted 28th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அதற்கான கட்டுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
காலியில் நேற்று (27) நடைபெற்ற “ ஒன்றிணைந்து வெல்வோம். காலியில் நாம் ” பொது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
“சவால்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடும் தலைவன் நான் அல்லன். நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, முன்னோக்கு சென்றுள்ளேன். வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவருகின்றோம். வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் தீரவில்லை என்பதை நான் ஏற்கின்றேன். மக்கள் கஷ்டத்துக்கு மத்தியில்தான் வாழ்கின்றனர். கடன் சுமை அதிகரித்துள்ளது. இது எமக்கு புரிகின்றது. எனவேதான் பிரச்சினைகளை கட்டங்கட்டமாக தீர்த்துவருகின்றோம்.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
“அஸ்வெசும வழங்கப்படுகின்றது. புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. உறுமய காணி உரிமை பத்திரம் வழங்கப்படுகின்றது. இவ்வாறு எம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றோம். பெருந்தோட்ட மக்களுக்கும் காணி உரிமை வழங்கப்படும்” எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)