
posted 31st July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுற்றுலாப் பயணிகளை தாக்கிய படகு உரிமையாளர்கள் மறியலில்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறாமலை தீவுக்கு சென்ற உள்ளூர் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய படகு சேவை உரிமையாளர்கள் மூவரை பொலிஸார் கைது செய்தனர்.
தெஹிவளை பகுதியில் இருந்து புறா தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய 60, 45 மற்றும் 40 வயது படகு உரிமையாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்து நிலாவெளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை 29 ஆம் திகதி காலை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியதாகவும் அதில் ஒருவர் கடுமையான இருதய நோயாளி என்பதால் அவருக்கு சரீர பிணை வழங்கப்பட்டதுடன் மற்றும் இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார் என்று பொலிஸார் கூறினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)