
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுற்றுலாப் பயணிகளுடன் விபத்துக்குள்ளான ஜீப்
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கண்டியிலிருந்து - மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த குடும்பத்தினர் பயணித்த ஜீப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இதன்போது, ஜீப்பில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மகாஓயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த ஜீப் வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிக வேகமாக வந்த வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்துக்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)