
posted 21st August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டும் அறுகம்குடா கடற்கரை
அம்பாறை, பொத்துவில் அறுகம்குடா பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால் அருகம்குடா வளைகுடா கடற்கரையை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கடற்கரைப் பகுதிகள் சர்வதேச அரங்கில் பல்வேறு தர இடத்தினைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள அறுகம்குடா கடற்கரைப் பிரதேசம் பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் இந்தப் பிரதேசத்துக்கு தினமும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் தமது பொழுதைப் போக்குவதற்காக வருகை தருகின்றனர்
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)