சுமந்திரன் கூறுவது ஒரு உண்மையான விடயம் அல்ல - சுரேஷ் பிரேமச்சந்திரன்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சுமந்திரன் கூறுவது ஒரு உண்மையான விடயம் அல்ல - சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுமந்திரன் கூறுவது ஒரு உண்மையான விடயம் அல்ல - சுரேஷ் பிரேமச்சந்திரன்

கோப்பாயில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தாதவது;

நான் எம்.ஏ. சுமந்திரன் அவர்களை ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்கவில்லை. அது அவரது அதீதமான கற்பனையினின்று வெளிப்பட்ட அப்பட்டமான பொய் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இன்றைய ஊடகங்களில் ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. திரு சுமந்திரன் அவர்களிடம் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா என்று கேள்வி என்னிடம் எழுப்பப்பட்டது. அப்போது நான் கூறியது, ‘உத்தியோகபூர்வமாக யாரும் என்னிடம் கேட்கவில்லை’ என்று.

இந்த விடயமானது ஒரு உண்மையானது அல்ல. ஆனால், ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பொது வேட்பாளர் தொடர்பாக கருத்தை ஒன்றை அவரிடம் நான் கேட்டது மாத்திரமல்ல அவரது கருத்தையும் நான் கேட்டருந்தேன் என்பது உண்மை. இந்தக் காலகட்டத்தில் யார் தமிழ் பொது வேட்பாளர் என்பது பற்றி எவரும் யோசிக்கவேயில்லை அத்துடன் கலந்தரையாடப்படவும் இல்லை.

எனவே, நான் உறுதியாகச் சொல்கின்றேன், நான் சுமிந்திரனிடம் இவ் விடயம் சம்பந்தமாகக் கேட்கவில்லை என்பதை முதலாவதாக மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஏன் இந்தக் கருத்துச் சொல்லப்பட்டது என்ற நான் சிந்தித்தால் இந்தப் பேச்சுக்களை, கலந்துரையாடல்களை குழப்புவதற்கான முயற்சியாகக் கூட இருக்குமோ என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.

ஆனால், எனது அபிப்பராயம் என்னவென்றால் இந்த பொது வேட்பாளர் கட்சி சாராத ஒருவராக இருக்கவேண்டும் என்பதுதான். இதில் நாங்களும் மிகவும் தெளிவாக இருக்கின்றோம் என்று சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார்.

சுமந்திரன் கூறுவது ஒரு உண்மையான விடயம் அல்ல - சுரேஷ் பிரேமச்சந்திரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)