
posted 24th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் திறப்பு
தேவை நிமித்தம் முன்னதாக மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்த கல்முனை தெற்கு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக கட்டடம் ஞாயிற்றுக்கிழமை (21) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டடத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.
கல்முனை தெற்கு சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி. சராப்டீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என். சிவலிங்கம், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டீ. ஜி. எம். கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி சகீலா இஸ்ஸடீன், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு மருத்துவ அதிகாரி எம். சீ. எம். மாஹிர், பிராந்திய மலேரியா தடுப்புப் பிரிவு பொறுப்பு மருத்துவ அதிகாரி எம். எம். நௌஷாட் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)