
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறு மாணவர்களின் மாபெரும் சந்தை
இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்திமைய மாணவர்களின் மாபெரும் சிறுவர் சந்தையானது 31.07.2024 புதன் கிழமை. தலைவர் திரு.ம. கஜந்தரூபன் தலைமையில் நூலகக் கொடியேற்றலுடன்
மாணவர்கள் தேவாரம் இசைத்ததைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பமானது.
வாழ்த்துரையை பேராசிரியர் க. தேவராஜா (போசகர் இணுவில் பொது நூலகம்), திரு. இரா. அருட்செல்வம் ஆசிரியர் (போசகர் இணுவில் பொது நூலகம்) ஆகியோர் நிகழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து அதிபர் உரையை சிறுவர் திறன்விருத்திமைய அதிபரும், முன்னாள் யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரி அதிபருமாகிய திருமதி . கமலராணி கிருஷ்ணபிள்ளை அவர்கள் நிகழ்த்தினார்.
மேலும், சிறுவர் திறன்விருத்திமைய அதிபர் திருமதி கமலராணி கிருஷ்ணபிள்ளை அவர்களும் போசகர்களான பேராசிரியர் க. தேவராஜா, திரு.இரா. அருட்செல்வம் ஆசிரியர் அவர்களும், இணுவில் மத்திய கல்லூரி அதிபர் திரு .இ. துரைசிங்கம் அவர்களும் சிறுவர் சந்தை நிகழ்வை நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.
மேற்படி நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அயல் பாடசாலை மாணவர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று மாணவர்களின் சந்தையை உற்சாகப்படுத்தியதுடன் ஏராளமான பொருட்களையும் வாங்கி மாணவர்களை மகிழ்வித்து சென்றார்கள்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)