
posted 11th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறார் இல்லங்கள் சட்டத்தை பின்பற்றுவதை உறுதிப் படுத்தல் வேண்டும்
வடக்கு மாகாணத்தில் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் சட்டவரையறைகளை பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் திருமதி சாள்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.
தெல்லிப்பழையில் இயங்கும் சிறுவர், மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலும் பிரதேச செயலாளரின் விசாரணை குழுவால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும் துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவினர் மீண்டும் களஆய்வு மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்றும் ஆளுநர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)