சிரமங்கள்  மத்தியிலும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிரமங்கள் மத்தியிலும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வரலாற்றில் மிகவும் கடினமான நிலைக்கு மக்கள் முகம்கொடுத்த போது நாட்டை மீட்கும் பொறுப்பை எவரும் ஏற்காத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதுடன், இரண்டு வருடங்களில் மீட்டெடுக்கவும் செயற்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதனை நினைத்துப் பார்ப்பது இந்த தருணத்தில் அவசியமானது என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த,

கொவிட் தொற்று மற்றும் நாட்டில் ஏற்பட்ட போராட்டத்துடன், இந்த நாட்டில் உள்ள ஏனைய எல்லா துறைகளைப் போலவே, கல்வித் துறையும் பாரிய நெருக்கடியை சந்தித்தது. வீழ்ந்த நாட்டை மீட்கும் பொறுப்பை வேறு யாரும் பொறுப்பேற்காத நிலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

அப்போது காணப்பட்ட நிலைமையை மாற்றி இரண்டு வருடங்களுக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் செயற்பட்டது. எனவே, இந்த நேரத்தில், நாட்டின் அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் நினைவு கூர வேண்டிய தேவை உள்ளது.

அத்துடன், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும்.

பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு உதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு கடந்த காலத்தில் நிறுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பல்கலைக்கழக கட்டமைப்புக்கும், நிர்மாணத் துறைக்கும் மிகவும் முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.

மேலும், கல்வித்துறையில் ஆசிரியர் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அதன் கீழ், ஆசிரியர்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்டும். அதன் மூலம் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க முடியும். அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், எதிர்வரும் புதன்கிழமைக்குள், உரிய உத்தரவுக் கடிதங்கள் அமைச்சுக்கு கிடைத்த பின்னர், மாகாண அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அத்துடன், இந்தக் காலப்பகுதியில் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் சுமார் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்க ஏற்பாடு செய்தோம். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வுகளை வழங்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். மேலும், 2700 Smart Board களை, பாடசாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான பாடசாலை வலயமைப்பையும் டிஜிட்டல் மயமாக்குவதே எமது திட்டமாகும். மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க 400 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளது.



எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

சிரமங்கள்  மத்தியிலும் ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News