
posted 25th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சின்னத்திரையினில் வரும் சம்பவம் யாழ்ப்பாணத்திலும்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அச்சுறுத்தியுள்ளதாக இன்று (24) புதன்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கடந்த 20/07/2024 சனிக்கிழமை நள்ளிரவுவேளை தமது வீட்டிற்குள் நுழைந்து தம்மை போதை தடுப்பு போலீசார் என அறிமுகம் செய்து தந்தை மற்றும் மகனை கை விலங்கிட்டு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளதாகவும், இது நான்காவது தடவையாக இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தனது மகன் தொடர்ந்து கல்வி கற்பதற்க்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்றைய தினம் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)