
posted 9th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சாவகச்சேரி வைத்தியசாலையின் கடமைகளை பொறுப்பேற்றார் வைத்தியர் ரஜீவ்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கடமைகளை வைத்தியர் ரஜீவ் அவர்கள் இன்றைய தினம் (09) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணிபுரிந்த வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் வடக்கு சுகாதார துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் வடக்கு சுகாதார துறைக்குள் இருந்து அவருக்கு பாரிய எதிர்ப்பும், மக்களிடம் இருந்து பாரிய ஆதரவும் கிடைத்தது.
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தும், வடக்கு சுகாதார துறையில் உள்ள ஊழல்களை தீர்க்குமாறு கோரியும் மக்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் மக்களை சமாளித்தவாறு வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் நேற்று (08) வைத்தியசாலையை விட்டு கொழும்புக்கு புறப்பட்டார். அந்தவகையில் வைத்தியசாலையின் கடமைகளை இன்றையதினம் வைத்தியர் ரஜீவ் பொறுப்பேற்றார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)