
posted 12th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு
இவ்வருடம் இந்தியாவில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொடமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் செந்தில் தொண்டமான் செய்து வரும் சமய சேவைகளை கருத்தில் கொண்டு இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாடானது இம்மாதம் 24, 25 ஆம் திகதிகளில் தமிழ் நாட்டில் பழனி முருகன் ஆலயத்தில் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டின் உலகளாவிய ரீதியில் இந்து சமயத்தின் வளர்ச்சி குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட உரை நிகழ்த்த உள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)