
posted 8th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சம்பந்தனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல் நேற்று மாலை தீயுடன் சங்கமமானது.
கடந்த ஜூன் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமான இரா. சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் அவரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை முதல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்றையதினம் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இரா. சம்பந்தனின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. திருகோணமலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் பூதவுடல் அங்கு தீயுடன் சங்கமமானது.
இரா. சம்பந்தனின் இறுதிக் கிரியை நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவை ஆளும் பா. ஜ. கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இராஜதந்திரிகள், அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் எம்.பிக்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் முப்படையினர், பொதுமக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)