
posted 20th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் தங்க நகைகள் திருட்டு
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளன.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.
தேர்த் திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் செல்வச்சந்நிதி ஆலயத்தில் திரண்டனர்.
இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய திருடர்கள், பக்தர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடியுள்ளனர்.
இவ்வாறு தேர்த்திருவிழாவில் மாத்திரம் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)