சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முனைந்த மீனவர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முனைந்த மீனவர்கள் கைது

மன்னார் நகர் கடற்கரைப் பகுதியிலிருந்து மன்னார் தென் கடல் பரப்பில் ஏழு மீனவர்கள் ஒரு வெளிக்களப் படகில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்காகச் சென்றுள்ளனர்.

இப் படகில் சந்தேகம் கொண்ட வங்காலை பிரதேச கடற்படையினர் இப் படகை சோதனையிட்டபோது சட்டவிரோதமாக மீன்பிடிக்கப் பாவிக்கப்படும் டைனமற் வெடிப் பொருட்கள் காணப்பட்டதால் படகுடன் ஏழு மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், சான்றுப் பொருட்களையும் கடற்படையினர் இப் பிரதேச கடற்தொழில் பரிசோதகரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் மன்னார் கடற்தொழில் திணைக்களம் கைதான மீனவர்களையும், படகையும் மற்றும் சான்றுப் பொருட்களையும் மன்னார் பொலிசாரிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர். விசாரணைக்குட்படுத்தப்பட்ட இம் மீனவர்களை விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் மன்னார் தென்கடல் பகுதியில் திங்கள் கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முனைந்த மீனவர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)